கோவை டிச:16
கோவை மாவட்டம் பெஞ்சல்’ புயல் காரணமாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
புயலால் வீடுகளை இழந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு திணறி வந்த நிலையில், கோயம்புத்தூர் பிஜிடி அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டராக்ட் கிளப் இணைந்து 200 குடும்பங்களுக்கு உயிர்காப்புக் பெட்டகம் வழங்கினர் இந்த கிட்களில் போர்வை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கெட் மற்றும் நாப்கின்கள் அடங்கும்.
இவை புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாகின்றன கடந்த 7 ஆண்டுகளாக சமூக நலனுக்காக செயல்பட்டு வரும் பிஜிடி அறக்கட்டளையும், ரோட்டராக்ட் கிளப்பும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஒருங்கிணைந்து செயல்பட்டது.
இந்த முயற்சியால், பலர் நம்பிக்கையுடன் மீண்டுவர உதவிகரமான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன இந்த முயற்சியைப் பாராட்டிய மக்கள்,பிஜிடி அறக்கட்டளைக்கும் ரோட்டராக்ட் கிளப்பிற்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளனர்.