நாகர்கோவில் பிப் 21
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நித்திரவிளை காவல் நிலையத்தில் 09.02.2015 அன்று காஞ்ஞாம்புறம் அருகே உள்ள கோயில்கல்தோப்பு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் ராஜேஷ்(40) என்பவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இவ்வழக்கின் விசாரணை குழித்துறை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கின் குற்றவாளியான ராஜேஷ் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர உறுதுணையாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி முத்துராமன்,நீதிமன்ற காவலர் சுதா, இவ்வழக்கின் நீதிமன்ற வழக்கு விசாரணை நடைமுறைகளை சிறப்பான முறையில் கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம்,ஆய்வாளா் அந்தோணியம்மாள், ஆகியோரை காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.