திண்டுக்கல்லில் எல்.ஐ.சி நிறுவனத்தின் 68வது ஆண்டு விழா பழனி சாலையில் உள்ள கிளை-1 அலுவலகத்தில் நடைபெற்றது விழாவிற்கு கிளை மேலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார்.அவர் கூறுகையில் உலகில் பல்வேறு அரசு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தோன்றி மிகுந்த பின்னடைவை சந்தித்தன. இந்நிலையில் இந்தியாவில் தோன்றிய எல்.ஐ.சி நிறுவனம் இரண்டாயிரத்து நாற்பத்து ஐந்து கிளை நிறுவனங்களுடன் சிறப்பாக செயல்பட்டு உலகில் முதல் இடம் பிடித்துள்ளது. எல்.ஐ.சி நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய முகவர்களுக்கு பொன்னாடையும்,பரிசுகளையும் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பாலிசிதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும், முகவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில்
திண்டுக்கல் எல்.ஐ.சி கிளை-1&2 ஊழியர்கள், முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள்,மற்றும் முகவர்கள் அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மதுரை கோட்டச் சங்கத் துணைத் தலைவர்
டி.வாஞ்சுநாதன் எல்.ஐ.சி யூனிட்-1 கிளை தலைவர் கே.பரத்
செயலாளர் எஸ்.ஜான்பால்
யூனிட்-2 கிளை தலைவர் ஏ.ஜான்சன் செயலாளர் பி.தங்கவேலு மற்றும் முதல் நிலை அதிகாரிகள் வளர்ச்சி அதிகாரிகள் முகவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கிளை-1 துணைமேலாளர் முத்துகுமார் சிறப்பாக செய்திருந்தார்.