நீலகிரி. நவ.23
நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தேசிய நூலக வார விழா நடைபெற்று வந்த நிலையில் கவியரங்கம், பட்டிமன்றம், இலக்கிய போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இதன் நிறைவு விழா கோத்தகிரி முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரிமா கோபால் வரவேற்புரை நிகழ்த்தினார் நூலகர் சுப்பிரமணியம், சித்ரா மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர் தாமரை செல்வி, மகாலட்சுமி பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழக அரசு நூலக பயன்பாட்டை கவனத்தில் கொண்டு கிராமப் பகுதிகளில் கூட நூலகம் அமைக்க பல்வேறு செயல் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது எனவும் மேலும் பொது நூலகங்களில் அரசு தேர்வுகள் மாணவர்கள் இலவசமாக படிப்பதற்கும் கணினி முறையினை கொண்டு செயல்படுவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமுதாய மேம்பட நூலகங்கள் முக்கிய காரணியாக இருப்பதாக ராமச்சந்திரன் தனதுரையில் குறிப்பிட்டார். முடிவில் கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு பரிசுகளையும் அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வழங்கினார். நிறைவாக ராஜேந்திரன் நன்றி கூறினார்.