வேலூர்_18
வேலூர் மாவட்டம் LIAFI இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் முகவர்கள் சங்கம் வேலூர் கோட்டம் சார்பில் அறவழிப் போராட்டம் கோட்டத் தலைவர் என் சக்தி தலைமையில் நடைபெற்றது தென் மண்டல தலைவர் ஜே கே என் பழனி வாழ்த்துரையாற்றினார் மண்டல பொருளாளர் முரளி கோட்ட செயலாளர் மாயக்கண்ணன் அ.இ.செ.கு. உறுப்பினர் ரவி கோட்ட பொருளாளர்
தாண்டவகிருஷ்ணன் மற்றும் வேலூர் கோட்டத்தின் 22 கிளை சங்க தலைவர்கள் செயலாளர் பொருளாளர்கள் நிர்வாகிகள் அனைத்து முகவர்கள் கோட்டை சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில் பழைய கமிஷன் முறையை தொடர்ந்திட வேண்டும் claw back ஷரத்தை கைவிட வேண்டும் உயர்த்தப்பட்ட பாலிசிகளுக்கான பிரீமியத்தை குறைத்திட வேண்டும் குறைந்தபட்ச காப்பீடு தொகை ஒரு லட்சமாக தொடர்ந்திட வேண்டும் அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும் பாலிசி மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி நீக்கிட வேண்டும் பாலிசிக்கான கடன் வட்டி விகிதம் குறைத்திட வேண்டும் குழு காப்பீடு வயதை 85 ஆக உயர்த்திட வேண்டும் என்பன போன்ற 8அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அறவழி போராட்டம் நடத்தினர்