கிருஷ்ணகிரி ஜூலை 5: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி வழங்க பட்டு வருகிறது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஐந்து நாட்கள் பயிற்சி இன்று தொடங்கியது. இந்த முகாமை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆட்சியர், மத்திய மாநில அரசுகள் இணைத்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் ஏற்படுத்த பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு மிகவும் குறைவான பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை உயர்த்துவதற்கு இந்த திட்டத்தின் கீழ் இந்த பகுதிகளில் பெண் குழந்தைகளின் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பட்டு வருகிறது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் பொது மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாணவியர் படிக்கும் போதே தொழிற் பயிற்சி கற்றுக் கொள்ள இந்த திட்டம் வழி வகுக்கிறது. ஐந்து நாட்களில் இணைய வழியாக நவீன தொழிற்நுட்பங்கள், வளர்ந்து வரும் இணைய வழி வேலை வாய்ப்புகள், அரசின் திட்டங்கள், மொபைல் தொழி்நுட்ப வேலை வாய்ப்புகள், போன்றவற்றை நன்கு அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி அளிக்க படுகிறது. இந்த பயிற்சியை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழிற் பயிற்சி நிலைய உதவி இயக்குநர் பன்னீர் செல்வம், கல்லூரி முதல்வர் கீதா உள்ளிட்ட பலர் இருந்தனர்.