புதுடெல்லி , நவ-08, மோடிஃபை நிறுவனம் மூலம் வணிக சிறு , குறு நிறுவனங்களுக்கு ஆசிய ரைசிங் நிதியில் கடனுதவி வழங்கி
வணிக ஏற்றுமதி பொருட்களுக்கான விற்பனை தொகையை முன்னதாகவே மோடிஃபை மூலம் கடனாக அளித்து , வாங்குவோரிடம் அந்த குறிப்பிட்ட தொகை பெற்று, ஏற்றுமதியாளர்களுக்கு ஆபத்தில்லா சூழ்நிலையை உருவாக்குவதே மோடிஃபை-ன் நோக்கமாகும்.
இத்திட்டம் மூலம் ஆசிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதோடு, அந்நிறுவனங்கள் அந்த கடனை திரும்ப செலுத்தும் வகையில் நிதியுதவி வழங்குகிறது.
உலகின் முன்னணி தளமான பி.என்.பி.எல் வாயிலாக ஜப்பானின் சுமிடோமோ மிட்சுய் வங்கி கழகம்
(எஸ்.எம்.பி.சி ) ஆசிய ரைசிங் நிதியில் இருந்து மோடிஃபை உக்திசார் முதலீட்டைப் பெற்று எஸ். எம். இ என்கிற சிறு, குறு நிறுவனங்களின் ஆசிய ஏற்றுமதியை ஊக்குவிக்கிறது.
இதுகுறித்து மோடிஃபை – ன் இணை நிறுவனர் நெல்சன் ஹோல்ஸ்னர் கூறியதாவது:-
மோடிஃபை மற்றும் எஸ்.எம்.பி.சி தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் மூலம் புதுமையான நிதி திட்டங்களுடன் சிறு, குறு நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த புதிய மூலதனத்தை அளிக்கும் நடைமுறை வாயிலாக மோடிஃபை ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ள சீனா மற்றும் இந்தியா போன்ற தொழில் வளர்ச்சி கொண்ட சந்தைகளில தனது வர்த்தக விரிவாக்கத்தை விரைவுபடுத்தும்.
மோடிஃபை நிறுவனத்தின் இயங்குதளமானது சிறு, குறு நிறுவனங்களுக்கு முக்கியமான பணப்புழக்கம் மற்றும் நெகிழ்வான கட்டண விதிமுறைகளை வழங்குகிறது.
இந்த நிதியுதவி வணிகத்தின் வலிமையையும் எதிர்காலத்திற்கான பார்வையில் எங்கள் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது.
மோடிஃபை நிறுவனம் 2018 ஆண்டு நிறுவபட்டதிலிருந்து 1800க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கி இந்தியாவின் வர்த்தகத்தை மிகவும் எளிதாக்கியுள்ளது என்று கூறினார்.