நாகர்கோவில் பிப் 22
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எடுத்துக்கொண்ட உறுதிமொழி :
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டு வரப்பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம், அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயா் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளா்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளில் உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.