அரியலூர், ஜூலை:30
அரியலூர் – பெரம்பலூர் மாவட்டம் அதிமுக செந்துறை வடக்கு ஒன்றியம் சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் வியாபார பெருமக்கள், மற்றும் பொதுமக்களிடம் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் மற்றும் பொறுப்பாளருமான குழூமூர்.செவ்வம் ஏற்பாட்டில் திமுக அரசு பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை, அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்செல்வன் தலைமையில் வழங்கினார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களையே மிகவும் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க தவறிய திமுக அரசு பதவி விலக வேண்டுமென வியாபாரிகள் பொதுமக்கள் மாணவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம்.ரமேஷ்,அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சந்திரகாசன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், பெரியாகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் அழகுதுரை, தளவாய். கிருஷ்ணன்,இலைக்கடம்பூர் அதிமுக பழனிவேல் ,கீழமாளிகை குணசேகரன் அதிமுக அம்மா (ஜெயலலிதா) பேரவை மாவட்ட செயலாளர் பொன்பரப்பி செந்தில்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.