வேலூர்-15
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி கடந்த 11.07.2024 அன்று உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவிப்பதற்க்காக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி
காட்பாடி விருதம்பட்டு காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டி வீட்டிற்க்கு சென்று உயிரிழந்தவரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதற்க்காக சென்னையில் இருந்து சதாப்தி இரயில் மூலம் காட்பாடி இரயில் நிலையம் வந்தவர் முன்னதாக ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறுகையில்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு,
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட திருவேங்கடம் என்ற நபர் சரண் அடைந்துள்ளார். அப்படி சரணடைந்தவரை வேக வேகமாக அதிகாலையிலேயே அழைத்து சென்றதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அந்த செய்தியின் வாயிலாக நான் அறிந்து கொண்டது, ஏன் அவசர அவசரமாக அழைத்துச் சென்றீர்கள் அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றதாக கூறுகிறார்கள்.
ஒரு கொலை குற்றவாளியை கைவிளங்கு போட்டு தான் அழைத்துச் செல்ல வேண்டும் என விதி இருக்கிறது. அப்படி இருக்கும்போது பாதுகாப்போடு தான் அழைத்து சென்றிருக்க வேண்டும். அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்றும் போது இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றதாக சொல்கிறார்கள் இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளி இல்லை என தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த நிலையில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது மேலும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது என்பது தான் என்னுடைய கருத்து என கூறினார்.
விக்கிரவாண்டி தேர்தலை பொருத்தவரைக்கும் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால் அதிமுக அதில் போட்டியிடவில்லை தற்போது பணபலம், அதிகார பலத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தோல்வி பயம் காரணமாகத்தான் அதிமுக தேர்தலை புறக்கணித்ததாக பொன்முடி கூறி இருந்தது குறித்து கேட்டதற்கு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியான திருக்கோவிலூரில் அதிமுக தான் அதிகமான வாக்கு வாங்கி உள்ளது என கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஆண்டுதோறும் கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக அதைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை.
குறிப்பாக தமிழக விவசாயிகளைப், பற்றியும் தமிழ்நாட்டு மக்களை பற்றியும் கவலைப்படாத அரசாக திமுக அரசு உள்ளது. அவரை பொறுத்த வரைக்கும் கூட்டணி தான் முக்கியம் அதிகாரம் தான் முக்கியம். இந்தியா கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. நமக்கு ஒவ்வொரு ஆண்டும் கொடுக்க வேண்டிய நீரைத் தான் நாம் கேட்கிறோம் ஆனால் இந்த விடிய திமுக ஆட்சியின் முதலமைச்சர் விவசாயிகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாமல் எவ்வித குரலும் கொடுக்கவில்லை ஆனால் நான் அறிக்கை மூலமாக எதிர்பை வெளியிட்டுள்ளேன் என கூறினார்.
இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பகுதி செயலாளர்கள் பேரவை எ.இரவி, பி.ஜனார்த்தனன், பி.நாராயணன், குப்புசாமி, வேலூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராகேஷ், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கே.பி.ரமேஷ், அம்மா பேரவை துணைச் செயலாளர் சி.பாலாஜி, மற்றும் மகளிர் அணி, எம்ஜிஆர் இளைஞர் அணி, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, ஆகிய அணிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்