அரியலூர்,ஜூலை:02
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்களின் ஒரு வாரம் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அந்த 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 1 முதல் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி அரியலூரில் முதற்கட்டமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இந்த போராட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், பொருளாளர் கொளஞ்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர் செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் உண்ணாவிரம் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.