தக்கலை மார்ச் 18
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஜாலியாக ஊர் சுற்ற வீட்டை விட்டு வெளியேறிய சகோதரிகளான பள்ளி மாணவிகள் 4-நாட்களுக்கு பின் போலீசார் அதிரடியாக மீட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து, தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இளம்பெண்ணுக்கு 14 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருக்கிறார்கள். சிறுமிகள் இருவரும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.ரப்பர் தோட்டத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இளம்பெண், ஒருசில நேரங்களில் இரவு நேர பணிகளுக்கு சென்றும் வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் இரவு வேலைக்குச் சென்ற பின்னர், சிறுமிகள் இருவரும் தக்கலை பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளனர்.நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தெருவில் சுற்றிய சகோதரிகளை, அவ்வழியே சென்ற வழக்கறிஞர் பேசி தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு 12 வயது சிறுமியை தனி அறையில் அடைத்து வைத்தவர், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவருகிறது. சிறுமியை வன்கொடுமை செய்தவர், சகோதரிகளை தக்கலை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச்சென்று, மதுரை செல்லும் பேருந்தில் ஏற்றி மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். மகள்கள் காணாதது தொடர்பாக தாய் மறுநாள் காலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், சிறுமிகள் தங்களின் கையில் ஸ்மார்ட்போன் வைத்திருந்த நிலையில், அதனை மதுரையில் வைத்து சார்ஜ் ஏற்றி ஆன் செய்தபோது அவர்களின் இருப்பிடம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமிகளை மீட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட
வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளை கடத்தி சீரழித்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? அஜித்குமாருக்கு உதவிய நபர்கள் யார் என்பதையும் போலீசார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று அஜித்குமாருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதால் திருமணம் நின்று போனதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறையினரின் கடும் முயற்சியால் நான்கு நாட்களில் சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களை சீரழித்த அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்துவதோடு உதவியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.