நிலக்கோட்டை அக்.10
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையில், நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நிலக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் எம்எல்ஏ தேன்மொழி சேகர்,முன்னாள் எம்பி உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ தங்கத்துரை பேரூர் செயலாளர் சேகர்.
ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்று
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில்
திமுகவில் வாரிசு அரசியல் நடைபெறுகிறது. முதலமைச்சர் வெளிநாடு பயணம் வழக்கமான ஒன்றுதான். திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது. மது, போதை விற்பனை கொடி கட்டி பறக்கிறது. நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த கடனை விட தற்போது திமுக ஆட்சியில் இரண்டு மடங்கு கடன் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. சினிமாவில் நடித்து அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்,ஆக வர முடியாது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் போற்றுவார்கள். அதிமுக நடத்தி வரும் போராட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. திமுக ஆட்சியில், மின் கட்டணம், விலைவாசி, சொத்து வரி உயர்ந்துள்ளது.
என்று கூறினார்.
இந்த கூட்டத்தின் போது நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நல்லதம்பி அதிமுக மாவட்ட கவுன்சிலர் செம்பட்டி ராஜா, அம்மையநாயக்கனூர் பேரூர் அதிமுக செயலாளர் தண்டபாணி அதிமுக நிர்வாகி புதுச்சத்திரம் குமரேசன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னதாக, மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் 150 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.