மதுரை டிசம்பர் 4,
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் மலை உச்சியில் இருந்து உருண்ட பாறைகளால் பறிபோன உயிர்கள்
தோண்ட தோண்ட உடல்கள் திருவண்ணாமலையில் துயரம் மண் சரிவில் சிக்கிய ஏழு பேரும் உயிரிழப்பு. 20 மணி நேரம் தேசிய மீட்பு படை, தீயணைப்பு படை, காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் உயிரிழந்த அனைத்து உடல்களையும் மிர்சி, ரூபி ஆகிய மோப்ப நாய்கள் மூலம் உடல்களை மீட்டனர் சென்னை ஐஐடியை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் அதாவது மீட்பு பணி நடைபெறும் இடத்தில் மண் சரிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர் ஐஐடி குழு
மேலும் திருவண்ணாமலையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் மலையின் மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குகை நமச்சிவாயர் திருக்கோவிலின் சுற்றுச்சுவர் மழையில் இடிந்து விழுந்தது. மேலும்
மண் சரிவில் வீடு புதையுண்ட இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. மேலும் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர் தலைமையில் மாநகர தலைவர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நேரில் சென்று மௌன அஞ்சலி செலுத்தி உடன் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.