சென்னை, பிப்-20,
அனைத்து இந்திய தொழிலாளர் கட்சியின் மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்ணடி பிரகாசம் சாலையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .
தேசிய அவைத் தலைவர் நேதாஜி கே. நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் பொதுச்செயலாளர் கே .எஸ்.பொங்காலியார் பொருளாளர் எஸ். மனோகரன் இணைச் செயலாளர் காஞ்சி குப்புசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
துணைச் செயலாளர்கள் கே .கே .செல்லமுத்து, ஈ. பி ராஜ், துணைத் தலைவர் நடராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் காமாட்சி, செண்பகம் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர் .
மேலும் பொதுச்செயலாளர் பொங்காலியார் மற்றும் மாநில நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய
தலைவரை ஆளுங்கட்சிக்கு சாதகமான, நபர்களை நியமித்து வருவதை தவிர்க்க வேண்டும். அது அனைவருக்குமான தீர்வாகாது. ஆகவே
போக்குவரத்து, இரயில்வேத்துறையில் கடைபிடிக்கும் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்தெடுக்கும் முறையில் நடத்திட வேண்டும்.
ரூ ,1200 ஆக இருக்கும் உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்திட வேண்டும் . கட்டிட தொழில் அனைத்து தொழிலுக்கும் பழமையான, முதன்மையான தெழிலாகும் .
இத்துறை சார்ந்த தொழிலாளர்க்கு ஐ.டி.ஐ போன்ற தொழிற்பயிற்சி அளித்து மருத்துவத்துறை, பொறியாளர்கள் துறை போன்ற அங்கீகாரம் அளித்திட வேண்டும். கட்டிடத்தொழிலாளர்கள் பெண்பிள்ளைகளுக்கு திருமண உதவி திட்டத்தின் மூலம் ரூ.20,ஆயிரம் வழங்கப்படுகிறது. அதை ரூ.50,000 ஆக உயர்த்திட வேண்டும் முதலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தனர்.