களியக்காவிளை, ஏப், 25 –
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயிலில் 12 – வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம், சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி துவங்கி மே 3-ம் தேதி நிறைவடைகிறது.
களியக்காவிளை அருகே பாத்திமாநகர், குரியன்விளையில் ஸ்ரீ பத்திரகாளி முடிப்புரை கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பந்திருநாழி சர்க்கரை பொங்காலை வழிபாடு நடப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்வருடம் 12-வது பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம் மற்றும் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா ஏப்ரல் 27-ம் தேதி துவங்கி மே 3-ம் தேதி நிறைவடைகிறது.
முதல் நாள் விழாவில் காலை அஷ்ட திரவிய மஹா கணபதி ஹோமம், உஷபூஜை, தோற்றப்பாட்டு, மதியம் அன்னதானம், மாலை தீப சிகா ஊர்வலம் நடக்கிறது. பாறசாலை பொட்டக் குழி ஶ்ரீ மகாதேவர் கோயிலில் இருந்து துவங்கி செறுவார கோணம் வழியாக கோயில் வந்தடையும். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் பண்பாட்டு மாநாட்டில் யாக நிர்மாக சேர்மன் சூழால் நிர்மலன் தலைமை வகிக்கிறார். இராமேஸ்வரம் கோயில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் வண்டா ஜி யாகத்தை துவக்கி வைக்கிறார். சிதம்பரம் கோயில் ஆச்சாரியர் பிரம்ம ஸ்ரீ சங்கர நடராஜ தீட்ஷித் மகா மண்ட லேசர் சங்கர கிருஷ்ணானந்த சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சடை சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் நாள் திருவிழா முதல் ஆறாம் திருவிழா வரை தினமும் மஹா கணபதி ஹோமம், பஞ்ச பூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர மஹா யாகம், பஞ்சபூத ஷப்த விம்ஷத்தி நட்சத்திர கலசாபிஷேகம், நடக்கிறது. மூன்றாம் திருவிழா தினத்தன்று மாலை ஸ்ரீ மஹா விஷ்ணு ஸகஸ்ர நாம ஜபம், , சிறப்பு பூஜை, நாகருட்டு, இன்னிசை விருந்து, நடக்கிறது. நான்காம் திருவிழா தினத்தன்று தேவியின் திரு சன்னதியில் அக்னி காவடி, புஷ்பாபிஷேகம், பக்தி இன்னிசை விருந்து நடக்கிறது.
ஐந்தாம் திருவிழா தினத்தன்று ஶ்ரீ மகா தேவருக்கு ருத்திர ஜபம், ஸகஸ்ர நாம ஜெபம், சிறப்பு பூஜை இதிகாச நாட்டிய நாடகம் நடக்கிறது. ஆறாம் திருவிழா தினத்தன்று மஹா சண்டிகா ஹோமம், தேவியின் சுயம்பு எழுந்தருளல், படந்தாலுமூடு ஸ்ரீமத் பகவத் கீதா பாராயண சமிதி சார்பில் ஶ்ரீமத் பகவத் கீதா பாராயணம் நடக்கிறது.
ஏழாம் திருவிழா தினத்தன்று தேவியின் சுயம்பு எழுந்தருளல், தேவிக்கும், உபதேவர்களுக்கும் புஷ்பாபிஷேகம், பூப்படை சமூக பொங்காலை, மதியம் தேவிக்கு விஷேச நாதஸ்வரம், தகில், சிங்காரி மேளத்துடன் பூப்படையும், வேதாள பீடத்தில் குருதியும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி கோயில்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics