மடத்துக்குளம் ஏப்ரல்: 21
குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 12 வருடங்களாக தமிழ் ஆசிரியராக பணியாற்றிய திருமதி சந்திரா அவர்கள் பணி ஓய்வு பெற்றதை முன்னிட்டு குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
சங்கராமநல்லூர் பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்பு சாமி துணைத் தலைவர் பிரேமலதா உத்தம ராஜ் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி. தாமோதரன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கன்னிஸ்வரி முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பள்ளி சார்பில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆசிரியர் பெருமக்கள் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி சந்திரா அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.