தேனி.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓபுலாபுரம் ஒரு சமுதாய பிரிவினருக்கு பாத்தியப்பட்ட பட்டாளம்மன் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. (14,9,24) சனிக்கிழமை மாலை 3 மணிக்கு துவங்கி 7 மணி வரை ஸ்ரீ பட்டாளம்மன் உற்சவமூர்த்தி ஊர்வலம் பெண்கள் மஞ்சள் கூடத்துடன் தெய்வீக நாட்டிய நடனத்துடன் விழா துவங்கியது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் சிறப்பு அன்னதானம் மற்றும் அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை திருச்சி அவ்வை சண்முகி தெய்வீக நாட்டிய நடனம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா.ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேக விழாவினை சமுதாய தலைவர் முனியாண்டி, செயலாளர் ஜோதிராஜ், பொருளாளர் நாராயணன், தலைமை தாங்கினர், தர்மகர்த்தா எஸ்.சி.சுருளி பொம்மையகவுடர் குடும்பத்தார்கள் முன்னிலை வகித்தனர். முதல் நாள் யாகசாலை பூஜை, இரண்டாம் நாள் யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், கோமாதா பூஜை, பரிவர்த்தன ஹோமம்,சுமங்கலி பூஜை, நித்திய தம்பதியினர் பூஜை என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தை கோம்பை வெங்கடேஷ் ராமானுஜம் நித்தியதேவி உபாசகர் சிறப்பாக நடத்தி இருந்தார். விழாவினை தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.சமுதாய பெரியோர்கள் கூறுகையில் . இந்த கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் சமுதாய பெரியோர்கள் விழா கமிட்டியாளர்கள் நன்றியினை தெரிவித்தனர். இந்த கும்பாபிஷேக விழாவினை சமுதாய நிர்வாகிகள்,இளைஞர் அணி நிர்வாகிகள், விழா கமிட்டினர் சிறப்பாக செய்திருந்தனர்.