தூத்துக்குடி மாவட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த கீழநாலுமூலைக் கிணறில் உள்ள பூரண, புஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் என்ற மெய்கண்டமூர்த்தி சாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு யாக சாலையில் புண்யாக வாசனம் விசேஷ சந்தி மூல மந்திர ஹோமம் 7.30 மணிக்கு பரிவார மூா்த்திகளுக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, 8 மணிக்கு கும்பம் எழுந்தருளல் காலை 8.30 க்கு ஸ்பர்சாஹுதி தீபாராதனைகளும். தொடர்ந்து 9.15 மணிக்கு கடம் புறப்பாடு 9.30 மணிக்கு விமான அபிஷேகம் 10 மணிக்கு குன்றுமேலய்யன் சாஸ்தா பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தரிசனம் காண வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மூன்று வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் கார்த்திக் அறங்காவலர்கள் அனிதா குமரன், ராம்தாஸ் கணேசன் செந்தில்முருகன் மற்றும் சாஸ்தா சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.