வேலூர்_18
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் கழனிபாக்கம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்நிறை அபிராமி உடனமர் சமேத அருள்நிறை பீமநாத ஈஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திருவிளக்கு பூஜை ,புனித நீர் வழிபாடு , யாகசாலை வேள்விகள், மங்கள இசை வாத்தியம் முழங்க திருக்குடங்கள் புறப்படுதல், மகா கும்பாபிஷேகமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தவச்சலம் பிள்ளை, விஜயலட்சுமி, கார்த்திக், யுவராஜ், டி.ஜி. பிரசாத், கஸ்தூரி ,மற்றும் கழனிபாக்கம் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.