ஈரோடு ஜூலை 15
ஈரோடு மாவட்டம் பிச்சாண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை பாளையத்தில் கன்னிமார் , கருப்பராயன் சாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் உற்சவ மூர்த்திகளாக மதுரை வீரன், வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் தன்னாசி முனிவர் ,அண்ணமார்சாமி , செம்முனி, வாமுனி, முத்துமணி, மகாமுனி, பாடகார முனி ,கோட்டை முனி, உதிர முனி, ஜாட முனி, ஜாம்பவான , பாம்பாட்டி சித்தர், புற்றுக்கண், குதிரை வாகனம் போன்ற பரிகார தெய்வங்கள் தெய்வங்களுக்கு ஆலயம் அமைத்து திருப்பணிகள் நடந்தது
இந்த பணிகள் நிறைவடைந்ததால் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 16 ம் தேதி முகூர்த்தக்கால் போடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது கடந்த 3 ந் தேதி முளைப்பாரி போடப்பட்டது 9 ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது 10 ம் தேதி மகா கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கருப்பராயன் சப்பாரம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது பிறகு யாக பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேக கருப்பராயன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து அபிஷேகம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது கும்பாபிஷேக விழாவை யொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இந்த கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் முத்துசாமி மற்றும் சுற்றுப்புற பகுதிகள சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.