நிலக்கோட்டை செப்.09:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட, சேடப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கோட்டை பெரிய பகவதியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு
அதிகாலை ஸ்ரீகணபதி ஹோமம் ஸ்ரீசுதர்சன ஹோமம் ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நவகிரக ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
முதல் கால யாக பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று அதன் பின்னர் பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி முத்தாய்ப்பாக தமிழில் வேத மந்திரங்கள் முழங்க
கோபுர கலசங்களுக்கு
புனித நீர்
ஸ்ரீ கோட்டை ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி தெளிக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து
பெரிய பகவதி அம்மனுக்கு
16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பால்குடம் மற்றும் முளைப்பாரி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேடப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை பூஞ்சோலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்மனுக்கு செலுத்தினர்.
இந்த விழாவிற்கு திண்டுக்கல் ஆத்தூர், மதுரை கோவை மற்றும் செம்பட்டி சுற்றி உள்ள பகுதியில் இருந்து 25000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை சேடபட்டி கிராம கமிட்டியினர் மற்றும் பெரிய பகவதி அம்மன் திருப்பணிக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.