வேலூர்-14
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நகர் முத்து மண்டபம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, கோபுர விமான கும்பாபிஷேகம் ,மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார், 17 வது வார்டு மாமன்ற உறுப்பினர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விழா குழுவினர்கள் , ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.