அஞ்சுகிராமம் ஜன-31 கன்னியாகுமரி மாவட்டம் லீபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆரோக்கியபுரம் கிராமத்தை சார்ந்தவர் கில்பர்ட்,எப்சி தம்பதியர்.இவர்களுக்கு சகாய அஜி என்ற பெண் குழந்தை உள்ளது
இவர் கன்னியாகுமரி இரயில்வே அருகில் உள்ள அவில்லா மனம் வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார். இவர் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றார். வெற்றிபெற்ற சகாய அஜியை பள்ளி இருபால் ஆசிரியர்கள் மற்றும் கன்னியாகுமரி சரக காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ், சுசீந்திரம் காவல் ஆய்வாளர் ஆதம் அலி சுசீந்திரம் காவல் உதவி ஆய்வாளர் அனுஜான், அஞ்சுகிராமம் உதவி காவல் ஆய்வாளர் லிபி பால்ராஜ், பழவூர் காவல் உதவி ஆய்வாளர் அனீஸ், சமூக ஆர்வலர் அழகை இந்திரா நகர் முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.