நாகர்கோயில் – அக் – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குமரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் துணைத் தலைவர் ரீத்தாம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவத்தில் புகார் மனு அளித்துள்ளார் . அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சித்திரங்கோடு சந்திப்பு அருகிலுள்ள வாய்க்காலில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மனித கழிவுகள், குப்பைகள், இறந்து போன நாய்கள், கோழிக்கழிவுகள் போன்றவற்றை கொண்டு வந்து கொட்டி துர்நாற்றம் வீசும் அளவிற்கு சுகாதாரக் கேடுணை ஏற்படுத்தி தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ளது. கடந்த மூன்று மாத காலமாக மேற்படி சானல் கரை சாலையில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் சுவாசம் விட முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலைமையில் உள்ளது. மேற்படி மனிதக் கழிவுகள் , மீன் கழிவுகள், கோழிக்கழிவுகள், வீடுகளில் வளர்க்கும் நாய், பூனை, போன்ற விலங்குகள் இறந்து விட்டால் அதையும் இந்த கால்வாயில் வீசி விட்டு செல்கின்றனர், அனைத்து கழிவுகளையும் இங்கு கொட்டி தேங்கி நிற்கும் தண்ணீரில் அவை அழுகி புழுத்து சுகாதாரக் கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இப்பகுதியில் அமைந்துள்ள குடிநீர் கிணறுகளில் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் குடிக்க விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலம் தாழ்த்தாமல் சானலை தூர்வாரி சுத்தப்படுத்திடவும், மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் கழிவுகளை கொட்டுவதற்கான குண்டுகள் அமைக்க இடமில்லாத காரணத்தால் சானலில் கொட்டி வருகின்றனர். இவர்களுக்கு கழிவுகள் கொட்டுவதற்கு ஊராட்சி சார்பில் கழிவு தொட்டி வைக்கவும் இவ்வாறு கழிவுகளை கொட்டாமல் தடுத்து நிறுத்திட அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைத்தும் மீறி கொட்டுபவர்களுக்கு அபராத தொகை விதித்திடவும், அது போன்று பாலத்தின் தென்பக்கம் பெண்கள் நடந்து செல்லும் பாதையில் ஆண்கள் சிறுநீர் கழித்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பகல் நேரத்தில் கூட பெண்கள் நடந்து செல்ல அச்சபடுகின்றனர், ஆகையால் அப்பகுதி புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள கடைகளை அப்புறப்படுத்தி விட்டு கழிப்பறைகளை கட்டி கொடுக்கவும்,
மேலும் திக்கணங்கோடு சந்திப்பில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக மழையிலும், வெயிலிலும் காத்து நிற்க்கும் பயணிகள் அப்பகுதியில் செயல்படும் கடைகளின் முன் உட்கார்ந்தால் புறம் போக்கில் கடைகளை வைத்திருப்பவர்கள் பயணிகளை விரட்டி விடுகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மயக்கமடைந்து கீழே விழும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதி புறம்போக்கில் கடை வைத்திருக்கும் நபர்களின் கடைகளை அப்புறப்படுத்தி மக்கள் நலன் கருதி பேருந்து பயணிகள் நிழற்க்கூடம் அமைத்து தரும்படியும் அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.