மார்த்தாண்டம், ஜன-22
தமிழகத்தில் நல உதவிகளுக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், எல்லா மாதமும் முதல்வாரத்தில் உதவித்தொகை வழங்க வேண்டும்,
நூறுநாள் வேலத்தித்திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நான்கு மணி நேர வேலை, முழு சம்பளம் வழங்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.
திருவட்டாரில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட இணை செயலாளர் ஆர் வில்சன் துவக்கி வைத்தார். நாகர்கோவிலில் பேராசிரியர் தா மனோகராஜ் துவக்கி வைத்தார். தக்கலையில். மாவட்டச் செயலாளர் சி முருகேசன் துவக்கி வைத்தார். கருங்கலில் எஸ் சார்லஸ் துவக்கி வைத்தார். மார்த்தாண்டத்தில் மாவட்டத் தலைவர். முகமது புரோஸ் கான். துவக்கி வைத்தார். அழகிய பாண்டியபுரத்தில் மாநில குழு உறுப்பினர் லிட்டில் பிளவர் துவக்கி வைத்தார். இந்த மறியலில்
கருங்கல், நாகர்கோவில் , மார்த்தாண்டம், திருவட்டார், கல்குளம், தோவாளை என மாவட்ட முழுவதும் மொத்தம் 141 பெண்கள், 182 ஆண்கள் என 323 பேர் கைதாகினர்.