குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் ஸ்ரீ முத்துமாகாளி தசரா குழு சார்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற சமபந்தி விருந்தினை துவக்கி வைத்தார்.உடன் மாவட்ட பிரதிநிதி தனசம்பத், மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ்,கிளை செயலாளர் வடக்கு தாமரைக்குளம் மணி, மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.ராஜா, முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சுதன்மணி,கிளை செயலாளர் இளங்கோ உட்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.