நாகர்கோவில் – ஜூன் – 17
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் பயிற்சி முகாம் மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் தனிஸ் வரவேற்புரை ஆற்றினார் சி பி ஐ மாவட்ட செயலாளர் செல்லசாமி துவக்க உரையாற்றினார் . குமரி மாவட்டத்தில் மீனவர்களின் வரலாறு படைத்த போராட்டங்கள் எந்த தலைப்பில் செலஸ்டினும், அகில இந்திய பொதுச் செயலாளர் புல்லுவிளை ஸ்டான்லி, மீனவர்களை தொழிற் சங்கத்தில் ஈடுபடுத்துவது என்ற தலைப்பில் அகமது உசேனும், பொதுவுடைமை சிந்தனை சிற்பி மா. சிங்காரவேலர் சிந்தனைகளும் தொழிற்சங்கமும் என்ற தலைப்பில் தோழர் தங்க மோகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார். இரண்டாம் சுற்றில் மாவட்ட பொருளாளர் பிராங்லின் தலைமையில் சமூக கலாச்சாரமும் மீனவர்களும் என்ற தலைப்பில் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் கருத்துரை ஆற்றினார்,எதிர்கால திட்டங்கள் பற்றி மாநிலச் செயலாளர் தோழர் அந்தோணி எடுத்துரைத்தார். நன்றியுரை தோழர் டிக்கார்தூஸ், நிகழ்ச்சி தொகுப்பு மாவட்ட செயலாளர் தோழர் சகாய பாபு, இந்த நிகழ்ச்சியில் மீனவர்கள், மீன் தொழிலாளர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
கச்சத்தீவு பிரட்சனை தேர்தலுக்கு மட்டும் பேசப்படுகிறது என்றும் தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் 6000 படகுகளுக்கு மானியத்தில் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார் ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டும் 8000 படகுகள் உள்ளன என்பது மீன்வளத்துறையினர் ஆய்வில் தெரிவித்து உள்ளனர். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுக கட்டு மான பணியில் ஊழலின் சிக்கிய பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு அவருக்கு பதவி உயர்வு வழங்கியிருப்பது போன்ற அரசின் செயல்பாடுகள் அனைத்தும் மீனவர்களை வஞ்சிக்கும் செயலாக இருந்து வருவதாக நாகர்கோவிலில நடைப்பெற்ற மாவட்ட மீன் தொழிலாளர் சங்க பயிற்சி முகாமில் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.