கன்னியாகுமரி, அக்.1-
குமரி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கன்னியாகுமரி கிளை தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார் .சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் பிரியதர்ஷன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் இதுவரை சங்கத்தில் இணையாத எர்த் மூவர்ஸ் உரிமையாளர்களை கண்டறிவது உறுப்பினராக இணைப்பது, இயந்திரங்களின் வாடகையை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இதில், சங்க செயலாளர் செல்வகுமார் ,பொருளாளர் மணிகண்டன் ,உறுப்பினர்கள் மணிகண்ட லிங்கராஜன் ,பூபதி,மகாஸ் ,மணிகண்டன் ,சகாயம் உட்பட பலர் பங்கேற்றனர்.