நாகர்கோவில் ஆகஸ்ட் 17
குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது. தமிழக முதலமைச்சருக்கு விஜய் வசந்த் எம் பி நன்றி தெரிவித்து கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021- ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த வருடத்திற்கான தகைசால் விருது பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் அவர்களை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பைக் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தேன். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், வட்டார தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.