அஞ்சுகிராமம் மார்ச்-22
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் சமூக சிந்தனையோடு மகளிருக்கா சிறந்த சேவை செய்துவரும் சிறந்த மகளிருக்கு சிறந்த சாதனையாளர் விருதும் கேடயமும் வழங்கி வருகிறது. இந்நிலையில் நாகர்கோயிலில் நடந்த விழாவிற்கு பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் டாக்டர் தர்மராஜன் தலைமை தாங்கினார்.மாநில தலைவர் ஷேக், துணைத் தலைவர்கள் ஜெயராஜ், கரீம், சொக்கலிங்கம், மாநில செயலாளர் இளைய பெருமாள், ரவி முருகன், கண்ணன், சசிக்குமார், மாநில மக்கள் தொடர்பு அளித்தலைவர் காசி விஸ்வநாதன், செல்வக்குமார் முன்னிலை வகித்தனர். வள்ளளார் பேரவை மாநில தலைவர் பத்மேந்திரா சுவாமிகள், நாகர்கோவில் மாநகராட்டி மேயர், குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழுத் தலைவர் பிரபா.ஜி.ராமகிருஷ்ணன், கேரளா அரசின் முதல்வர் பதக்கம் பெற்ற போலீஸ் அதிகாரி ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் முதன்மை சிறப்பு நீதிபதி திருநீலப்பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் குமரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டு வருபவரும், குமரி கலப்பை மக்கள் இயக்க மாவட்ட மகளிர் அணி அமைப்பாளருமான குமாரபுரம் தேரப்பூர் அனிதாவிற்கு சிறந்த சாதனையாளர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை நீதிபதி திருநீலப் பிரசாத், சுவாமி பத்மேந்திரா, பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் தர்மராஜன் ஆகியேர் வழங்கினர். விருது பெற்ற குமாரபுரம் தோப்பூர் அனிதாவை கலப்பை மக்கள் இயக்க நிறுவனர், சினிமா டைரக்டர் பி.டி.செல்வக்குமார் பாராட்டினார்