குளச்சல் நவ 9
குமரி மாவட்டம் குளச்சல் ஆசாத்நகர் பகுதியில் மழை காலங்களில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் குடியிருப்புக்குள் வருவதால் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு மிகவும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. மழைகாலங்களில் ஆசாத்நகர், சுனாமி காலணி, தோழமை காலணி உட்பட பல பகுதியில் இருசக்கர வாகனம், ஆட்டோக்கள், பள்ளி வேன்கள், பொதுமக்கள் நடந்து செல்லமுடியாத சூழ்நிலை பல வருடங்களாக தொடர் கதையாக உள்ளது. எனவே மழைநீர் வடிகால் ஓடை வரிவாக்க பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஜலாலுதீன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் செந்தில் குமார் சந்தித்து பல்வேறு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசீர் கான், ஜாண் ரோஸ், முஸ்லீம் லீக் மாவட்ட துணை தலைவர் நைனா முகம்மது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நசீம், சமூக ஆர்வலர் முகம்மது சபீர், மாகீன், முகம்மது அனீபா, சாகுல் அமீது, ஆகியோர் கலந்து கொண்டனர்.