நாகர்கோவில் நவ 24
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் 22-ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
போக்ஸ்சோ புகார்களுக்கு தாமதம் இன்றி உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்,போக்ஸ்சோ குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்,
மாலை ரோந்து, இரவு ரோந்து பணிகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றத்தை தடுப்பதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்,
திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்து திருட்டு போன பொருள்களை மீட்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும், நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றுவதில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பாளர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
காவல்துறை புலன் விசாரணை நடவடிக்கைகளில் எடுக்கப்படும் வீடியோ பதிவுகள் நீதிமன்ற விசாரணைக்கு பயன்படுத்தும் வகையில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ள e shakshya செயலியின் செயல்பாடுகள் குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது. இதனை அனைத்து அதிகாரிகளும் முறையாக தெரிந்து கொண்டு புலன் விசாரணை நடைமுறைகளில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்கள்
மேலும் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்
போக்குவரத்து அலுவலில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள்
சாதாரண குற்ற வழக்குகளில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதில் திறம்பட செயல்பட்ட உதவி ஆய்வாளர்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவலர்கள்
சட்டவிரோதமாக அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்துபவர்களை குறித்த ரகசிய தகவலை தெரிவிப்பதில் திறம்பட செயல்பட்ட தனிப்பிரிவு காவலர்கள்
Ûநீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைவில் கோப்புக்கு எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்
சி சி டி என் எஸ் அலுவலில் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்
நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றுவதில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள்
காப்பு அலுவல் மற்றும் பாதுகாப்பு அலுவலில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை பெண் காவலர்
குற்ற வழக்குகளில் விரைவில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த அரசு வழக்கறிஞர்கள்
சட்ட ஆலோசனை தருவதில் திறம்பட செயல்பட்ட மாவட்ட காவல் அலுவலக சட்ட ஆலோசகர்
ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்கள் வழங்கினார்.