ஜூலை -28-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அட்கோ காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பாகலூர் ரோடு NGGO’S காலனியில் உள்ள IDBI Bank ATM-ல் அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம்-ற்குள் நுழைந்து கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் மெஷினை உடைத்து அதிலிருந்த பணம் சுமார் 14,50,000/- திருடு போனது தொடர்பாக அட்கோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இவ்வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் .பாபுபிரசாத் காவல் துணை கண்காணிப்பாளர் ஒசூர் உட்கோட்டம் அவர்களின் மேற்பார்வையில் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததால் ஹரியானா மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டதில் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் பெங்களூரில் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெங்களூரு சென்று எதிரி சாபீர் (எ) சாமீர் (34) த/பெ. மன்னான் காமேடா கிராமம் மேவாத் பரீஸாபூர் ஜர்கா ஹரியானா மாநிலம் என்பவரை கைது செய்து சாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேற்படி ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்திய Container Lorry-601 ஒட்டுநர் என்றும் சம்பவதற்காக சூளகிரி காமன்தொட்டியில் நிறுத்தி இருந்த ECO Car -ஐ திருடி கர்நாடகா மாநிலம் பெலத்தூரில் ஒரு ஏடிஎம் மெஷினை உடைத்ததில் அதில் பணம் குறைவாக இருந்ததால் மீண்டும் ஒசூர் வந்து பாகலூர் ரோட்டில் உள்ள IDBI ATM-ஐ உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி கொண்டு காரில் மாலூர் வந்து காரை விட்டுவிட்டு லாரியில் தப்பி சென்று உள்ளனர். மேற்படி குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய தனிபடை அமைத்து தேடி வருகின்றனர் காவல்துறையினர் .