திருப்புவனம் ஜூலை 07
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழ வெள்ளூர் என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் 45 வயது மதிப்புடைய நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு மேலும் முகம் மற்றும் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் என்று தெரிய வந்தது இந்த நிலையில் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க தென்மண்டல ஐஜி கண்ணன் டிஐஜி துரை
சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டோங்கிரி பிரவீன் உமேஷ் கூடுதல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் திருப்புவனம் காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் மேற்பார்வையிலும் துணை ஆய்வாளர் ஜெயகண்ணன் மற்றும் காவலர்கள் கண்ணன் அருள் சோழன் கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் அனீஸ் ரகுமான் அண்ணாமலை ஆகியோர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு கொலை செய்யப்பட்ட அக்பர் அலி அனீஸ் ரகுமான் அண்ணாமலை மூவரும் வெவ்வேறு குற்ற வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருந்துள்ளனர் அப்பொழுது நட்பு ஏற்பட்டு அவர்கள் வெளிவந்தவுடன் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பிரச்சனை ஏற்பட்டதால் அனீஸ் ரகுமானும் அண்ணா மலையும் சேர்ந்து அக்பர்அலலியை கொலை செய்ய திட்டமிட்டனர் அதன்படி கீழ வெள்ளூரில் உள்ள தென்னந்தோப்பில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வந்து அவரை வயிற்றில் கத்தியால் குத்தி மற்றும் முகம் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் தனிப்படையினர் கண்டுபிடித்து கைது செய்து திருப்புவனம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேற்படி குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிபடையினரை தென்மண்டல ஐஜி, டி ஐ ஜி சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.