ராமநாதபுரம். ஜீலை7 தமிழ்நாடு காவல்துறை சார்பாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 15.06.2024-ஆம் தேதி முதல் 19.06.2024-ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் நடைபெற்றது.
இதில் துப்பாக்கிசுடும் போட்டியில் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பெண் தலைமை காவலர் .இராமலெட்சுமி கலந்து கொண்டு ரைபிள் 100 யார்ட்ஸ் பிரிவில் முதல் இடத்தை பிடித்து கேடயம் வென்றுள்ளதோடு மட்டுமல்லாமல், தமிழக காவல் துறை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தைப் பெறுவதற்கு முக்கியப் பங்காற்றினார்
மேற்படி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு கேடயம் வென்று இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பெண் தலைமை காவலர் .இராமலெட்சுமி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.G.சந்தீஷ், அவர்கள் சான்றிதழ் வழங்கி வெகுவாக பாராட்டினார்கள்.