மதுரை செப்டம்பர் 18,
தங்கம் வெல்ல பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டரை பாராட்டிய காஞ்சிபுரம் தலைவர்
மதுரை, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பின் மாவட்ட துணைச் செயலாளர் வேலுவின் 12 வயதுள்ள மகன் ஹரிஷ் 3 வது ஹீரோஸ் கப் இரண்டாம் ஸ்டேட் லெவல் டேக்வண்டு சாம்பியன்ஷிப் 2024 ஆகஸ்ட் 31 ல் மதுரை விளாம்பட்டியில் உள்ள வல்லபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு தங்கமும், இரண்டாம் பரிசு வெள்ளியும் வென்றுள்ளான். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டர் அர்ஜுன் அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் வேலு, இளைஞர் அணி செயலாளர் கிருபாகரன், மாவட்ட இணை செயலாளர் கண்ணன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.