குளச்சல் பிப் 27
கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் நகர அதிமுக தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நகர அலுவலகத்தில் வைத்து நகர செயலாளர் ஆண்ட்றோஸ் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் ஆறுமுகராஜா, முன்னாள் மாணவரணி ரவீந்திரவர்சன், முன்னாள் நகர செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்திற்க்கு சிறப்பு சிறப்பு விருந்தினராக மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநில இணைசெயலாளர் சிவசெல்வராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் இராஜ்குமார், எஸ்.எம்.பிள்ளை, அப்துல் நாசர், நாஞ்சில் அனிபா முருகன், இலக்கிய அணி மாவட்ட இணைசெயலாளர் வக்கில் சந்திரசேகர், மகளிரணி மாவட்ட இணை செயலாளர் அம்பிளி கலா, நகர நிர்வாகிகள் குமாரதாஸ், ரெஜி, தர்மராஜ், நகர அணி செயலாளர்கள் செல்வகுமார், ஜெகன், வினோத், தஸ்லீம், அபுதாயிரு,மலுக்கு முகம்மது, ரமேஷ்பாபு, சுபல், செய்யது, மணிகண்டன், நிர்மலா பேபி, செல்வராணி, ராஜன், தங்கம், சரஸ்வதி, உள்பட நூற்றுக்கு மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சேமிப்பு திட்டத்தில் 4500 ரூபாய் கொடுக்க வேண்டிய அரசு 3000 ரூபாய் மட்டுமே வழங்கியது மீனவர்களின் வாக்குகளை பெற்று எம். எல்.ஏ ஆன ஐந்து எம்.எல்.ஏக்களுக்கும் மீனவர்களுக்கு குரல் கொடுக்காத நிலையில் அதிமுக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் குரல் கொடுத்து மீதித் தொகையை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
இறுதியாக ,மாவட்ட பிரதிநிதி சுப சந்தியா நன்றி கூறினார்.