கோவை டிச: 07
கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் கோவில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு வருகின்ற 12.12.24 அன்று நடைபெற உள்ளது. விழா குறித்து திட்டமிடுவதற்காக சிறப்பு ஆலோசனை குழு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
காவல்துறையின் சார்பில் டிஎஸ்பி ஸ்ரீநிதி, ஆய்வாளர் தாமோதரன், துணை ஆய்வாளர் மைக்கேல் பங்கேற்று பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை தெரிவித்தனர்.
இதில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் டி. ஆர்.திருமுருகன், எஸ்.எஸ். மஞ்சுளாதேவி, சு. மருதமுத்து, செயல் அலுவலர்கள் சீனிவாச சம்பத், கந்தசாமி ஆகியோர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், கே. பாக்கியசாமி, தாசில்தார் ராஜேந்திரன், நெடுஞ்சாலைத்துறை த.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று அவரவர் துறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கினர்.
ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தகுமார், செயல் அலுவலர் அப்துல்லா ஆகியோர் பேரூராட்சியின் மூலம் செய்யப்படவுள்ள பணிகளை விளக்கிக் கூறினர்.
திமுக பொறுப்பாளர் சாந்தகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் மேலும் கோவில் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் “நம்ம ஊர் நம்ம கோயில்” என்ற முழக்கத்துடன் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டனர்.