பிப்:15
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அப்பல்லோ மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா திருப்பூர் மங்கலம் சாலையில் நடைபெற்றது.
இந்த மருத்துவமனையினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்,முன்னாள் மக்களவை உறுப்பினருமான.கே. எஸ்.அழகிரி,திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்.க. செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.இந்த மருத்துவமனையில் பல் சிகிச்சைக்கான மருத்துவம்,சர்க்கரை நோய்,பொது மருத்துவம் என சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்.ஆனந்தி அழகிரி,தொழிலதிபர். வசந்த்,காங்கிரஸ் கமிட்டியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர். கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர். கோபால்சாமி, மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர். முகமது ஹசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், கிட்ஸ் கிளப் பள்ளி குழுமத்தின் தலைவர். மோகன் கார்த்திக், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க மாநில துணைத்தலைவர். TKT.நாகராஜ் மற்றும் தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.