மார்த்தாண்டம், ஏப்- 22
குமரி மாவட்டத்தில் உள்ள புராதன பெருமை வாய்ந்த மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் புதிதாக நிறுவுவதற்கான கொடிமரம் களியக்காவிலிருந்து கோவில் வரை நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இக்கோயிலில் அஷ்டமங்கள தேவ பிரசன்னம் விதிப்படி கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலில் நிரந்தர கொடிமரம் நிறுவப்பட உள்ளது. இதற்காக கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், கோன்னி பகுதியில் இருந்து கொடி மரத்துக்கான தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டு, கோயில் தந்திரி திருச்சூர் பிரம்ம ஸ்ரீ நாராயணன் நம்பூதிரி தலைமையில் பலி தூவல் ஆராதனை ஹோமம், புண்ணியாகம் மற்றும் ஆயுத பூஜை, தாரு பரிக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து லாரியில் கொண்டுவரப்பட்ட 42 அடி உயர கொடி கம்பத்துக்கு களியக்காவிளையில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டு, கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. இதில் கோவில் கமிட்டி தலைவர் சசிகுமார், செயலாளர் பத்ம குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.