சிவகங்கை: பிப்:27
சிவகங்கையில் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் நிறுவனர், தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது . கூட்டத்திற்கு முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் தரமான உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி, தொழில் நிறுவனங்கள் இல்லாமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது . சிவகங்கை மாவட்டத்தின் உள்ளே இருக்கும் காரைக்குடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தலைநகரம் சிவகங்கைக்கு கொடுப்பதில்லை என பொதுமக்கள் என்னிடம் குறை கூறுகிறார்கள்.
பொதுவாகவே மக்கள் பணிக்கு வருபவர்கள் தனது சொந்த ஊர் பகுதி என்று பார்ப்பது நல்லதல்ல . தமிழகம் முழுவதும் நீண்ட காலமாகவே அரசு பணியிடங்கள் காலியாகவே உள்ளது . ஜாக்டோ – ஜியோ அமைப்புகளை தமிழக அரசு ஏமாற்றி வருவது வேதனை அளிக்கிறது . இந்த அரசு கடந்த நான்காண்டு காலமாகவே மத்திய அரசை எதிர்ப்பதிலையே காலத்தை கடத்தி வீணடித்து விட்டார்கள் . இந்தச் சண்டையில் பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான் . தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் தாராளமாக இயங்குகிறது . இதே போல் போதை பொருட்களும் மறைமுகமாக அரசின் உடந்தையோடு விற்பனை நடந்து வருகிறது . இப்படிச் செய்துவிட்டு தமிழக முதல்வர் போதை இல்லாத தமிழகம் உருவாக்குவோம் என விளம்பரம் செய்வது யாரை ஏமாற்ற.சமீப காலமாக பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பிற்கு காரணமே மது , மற்றும் போதைப் பொருட்கள் தான் . அமைச்சர்களின் குழந்தைகள் வெளிநாட்டில் பலமொழிக் கல்வியை படிக்கிறார்கள் .
குறிப்பாக இங்கிலாந்தில் அமைச்சர்களின் குழந்தைகள் படிக்கும் பகுதியே ஒரு தனிக் கிராமமாகவே இப்போது உருவாக்கி விட்டது . ஆனால் இந்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் மும்மொழி வேண்டாம் . இந்தி மொழி வேண்டாம் என வீர வசனம் பேசுகிறார்கள் . இவை ஏழைகள் மத்தியில் எடுபடாது . ஜாதிவாரி கணக்கெடுப்பில் இன்னும் காலம் கடத்தி வருகிறார்கள் . தமிழகத்தில் பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
அரசு இவற்றை
முறைப்படுத்தவில்லை . சிங்கிள் போஸ்ட் – என்ற பணியிட நியமனம் வரும்போது அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தவருக்கே போய்ச் சேருகிறது . இட ஒதுக்கீடுகளில் உள்ள முரண்பாடுகளையும் , மறுப்புகளையும் சரியான பாதையில் எடுத்து வெற்றி பெற இட ஒதுக்கீடு மீட்பு கருத்தரங்கம் , கருத்துக் கேட்பு இவற்றிற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன் . எங்கள் புதிய தமிழகம் கட்சி தனது கொள்கைக்காக அர்ப்பணித்து சரியான பாதையில் சென்று வெற்றி பெறும் . இவ்வாறு அவர் கூறினார் .அப்போது கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர் .