கரூர் மாவட்டம் – அக்டோபர் – 19
கரூர் (நெ) க(ம)ப கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப உட்கோட்டம், கிருஷ்ணராயபுரம் (நெ) க(ம)ப பிரிவின் பராமரிப்பில் உள்ள மாவட்ட முக்கிய சாலையான மகாதானபுரம் மைலம்பட்டி (வழி) பழையஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி சாலை (MDR 625) 1/10 ல் கட்டளை மேட்டு பாசன வாய்க்காலின் குறுக்கே புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அணுகுசாலையின் இடது பக்கத்தில் 14.10.2024 அன்று பெய்த மழையின் காரணமாக சாலையின் புருவப்பகுதியில் மண் அரிமாணம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து கோட்டப்பொறியாளர் திரு. R. ரவிக்குமார், (நெ) க(ம)ப கரூர் கோட்டம், உதவிக் கோட்டப்பொறியாளர், ஆர்.கர்ணன் (நெ) க(ம)ப கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் மற்றும் உதவிப்பொறியாளர், அ.அ. அசாருதீன் (நெ) க(ம)ப கிருஷ்ணராயபுரம் பிரிவு ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், கோட்டப் பொறியாளர், R. ரவிக்குமார், (நெ) க(ம)ப கோட்டம் கரூர் அவர்களின் அறிவுரையின்படி அந்த இடத்தில் தாங்கு சுவர் அமைக்கும் பணி மதிப்பீட்டில் உள்ளது. எனவே, மழை மற்றும் கட்டளை மேட்டு பாசன வாய்காலில் தொடர்ந்து நீர் சென்று கொண்டுள்ளதால் தாங்கு சுவர் அமைக்கும் பணி தற்பொழுது மேற்கொள்ள இயலவில்லை மேற்படி இடத்தில் பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தற்சமயம் தற்காலிகமாக மண் நிரப்பப்பட்டு மண்அரிமாணம் சரிசெய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.