வேலூர்_28
வேலூர் மாவட்டம் ,சங்கரன் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு உற்சவருக்கு அலங்காரமும் ,சிறப்பு பூஜைகளும், நைவேத்தியமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், வெகு விமர்சையாக நடைபெற்றது .ஸ்ரீ கோகுலாஷ்டமி விழாவில் சங்கரன்பாளையம் பேட்டை வாசிகள் மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.