ராமநாதபுரம், ஏப்.7-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி ஆண்டு விழாவில் முதல்வர் டாக்டர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றி பள்ளி மாணவ மாணவிகளின் சாதனைகள் மற்றும் கடந்த ஆண்டில் பள்ளி மாணவர்களின் படைப்புகள் செயல்பாடுகள் குறித்து பேசினார். பள்ளியில் பயின்று மதுரை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் தான் சேர்ந்த பிறகு தனக்கு ஆசிரியர்கள் ஊக்கமளித்து இரவு 10 மணி வரை பள்ளி வளாகத்தில் சிறந்த பாதுகாப்புடன் நான் விடாமல் படித்து வந்ததில் பயன் எனக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வருவதற்கு முழு காரணம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி என்று கூறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் பள்ளி தாளாளர் மற்றும் அனைவருக்கும் இந்நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி பல மருத்துவ கல்லூரி மாணவர்களை மட்டும் இன்றி சாதனை மாணவர்களையும் உருவாக்கி வருகிறார்கள் என்பதற்கு நான் ஒரு உதாரணம் என்று பெருமைப்பட பேசினார்.
மாநில அளவில் சாதனை புரிந்த மாணவர் தனது கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி அனுபவம் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
பிரபல மோட்டிவேஷன் பேச்சாளர் சுமதி ஸ்ரீ மாணவ மாணவிகளுக்கு எதிர்காலம் மற்றும் எவ்வாறு சாதனை புரிவது என்பது குறித்து விளக்கிப் பேசினார். ஆண்டு விழாவில் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர். விழாவில் மாணவிகளை விழா நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியது பெற்றோர்களை மிகவும் வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு வகுப்பு மாணவ மாணவிகளும் ஒவ்வொரு விதத்தில் தங்களது தனி திறமைகளை வெளி காண்பித்தது மிகவும் பாராட்டுதலை பெற்றது.
விழாவில் பாடகர் அரவிந்த், பள்ளி தாளாளர் ஜீவலதா, செயல் இயக்குனர் சௌந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியில் வரும் ஆண்டு முதல் பள்ளியின் முன்னாள் தாளாளர் கணேச கண்ணன் நினைவாக அவரது பிறந்த தினமான ஜூலை 14ஆம் தேதி அன்று ரியல் மெமோரியல் டோர்னமெண்ட் போட்டிகள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தாளாளர் ஜீவலதா பேசினார்.