சென்னை, மேற்கு தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் உள்ள, அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்ட ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் திருக்கோயிலின் சன்னதிகள் யாவற்றையும் இந்து அறநிலைத்துறையின் அனுமதியின் பேரில் திருப்பணிகளை மேற்கொண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு
அருள்மிகு செல்வ விநாயகர் அருள்மிகு கோதண்டராமர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டும் பெருஞ்சாந்தி
கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழாவினைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகளும் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில்
மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் பா.தமிழ்செல்வி ஆலோசனையின் பேரில் ஆலய செயல் அலுவலர் இரா.ப.தீபா மேற்பார்வையில் ஆலய நிர்வாகிகள் மற்றும் கும்பாபிஷேக விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.