நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக
மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் அரசு துறை அலுவலர்களுடன் பரிசலில் சென்று கலந்து கொண்டார் ..
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா அரசு உயர்நிலைப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியில் திறம்பட செயல்பட்ட தூய்மை காவலர்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் .