கோவை செப்:09
கோவை கணபதி மாநகர் வெற்றி விநாயகர் நகரில் உளள் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வெற்றி விநாயகர் த திருக்கோவிலில் 31 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 7-ம் ஆண்டு திருத்தேர் விழா மகா அன்னதானப் பெருவிழா வெகு விமர்சியாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.
அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களினால் சங்கு தீர்த்தம் ஏந்தி வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து விநாயகருக்கு பிரம்மாண்டமான அலங்காரம் நடைபெற்றது.
கைலாயத்தில் விநாயகர் சிவ பூஜை செய்வதை போன்று பிரம்மாண்ட அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகரை தரிசித்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அலங்காரம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாகவும் கைலாயத்தில் சாமி தரிசனம் செய்தது போன்ற உணர்வை தருவதாக பிரமிப்புடனே தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருள் ஆசிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கல்யாண விருந்து போல 15 வகையான பதார்த்தங்களுடன் அன்னதானம் நடைபெற்றது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாலையில் பெண்களின் பரதநாட்டியம் கோலாட்டம்,, கும்மிப்பாட்டு நடன நிகழ்ச்சியும் திருச்சி மணிமொழி கலைக்குழுவினரின் முருகன் வள்ளி தெய்வானை விநாயகர் பக்தி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் கோவில் பெண் நிர்வாகிகள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேர் திருவீதி உலா சென்றது. இதனை பெண் நிர்வாகிகள் தேர் வடம்பிடித்து துவக்கிவைத்தனர்.
அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கம்பீரமாக அப்பகுதியில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருள் பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பானுமதி நீளமேகம் துணைத்தலைவர் விஷ்வாம்பரன், செயலாளர் வி முருகன், துணைச் செயலாளர் வேணுகோபால், பொருளாளர் அரங்கநாதன், துணைப் பொருளாளர் எம் சௌரிராஜன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குருப்பிடத்தக்கது.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதி பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் மிகு வெற்றிவிநாயகரை தரிசித்து அருள் பெற்றனர்.