குலசேகரம், ஜன- 7
குலசேகரம் அருகே கோணத்து விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பிரசாத் (29). இவரது மனைவி சுபிலா. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (31 ) பெயிண்டர். இவர் சுபிலாவை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கணவர் பிரசாத் தட்டி கேட்டுள்ளார். இதனால் அபிலாசுக்கும் பிரசாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தபிலர் கத்தியால் பிரசாந்தின் தலையில் வெட்டினார். இதை தடுக்க வந்த சுபிலாவை கீழே தள்ளி, கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
காயமடைந்த பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சுபிலா குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கத்தியால் வெட்டிய அபிலாசை இன்று 6-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.