போகலூர், அக்.13-
போகலூர் அருகில் சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பள்ளி தாளாளர் வாசன் மற்றும் பெற்றோர் இணைந்து மழலையர் மாணவர்களின் கைப்பிடித்து நெல் மணியில் தமிழ் உயிர் எழுத்து தொடக்கமாகிய “அ” என்று எழுதி கல்வி தெய்வம் சரஸ்வதி பூஜையான விஜயதசமி நாளில் மழலையர் குழந்தைகளுக்கு கல்வியை புகட்டி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சக்திவேல், நிர்வாகி உமா வாசன், பள்ளி முதல்வர் வனிதா மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அமிர்தா வித்யாலயம் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வுக்குப் பள்ளி மேலாளர் பிரம்மச்சாரினி இலட்சுமி அம்மா தலைமை தாங்கிட, பள்ளி முதல்வர் கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் பாலவேல் முருகன் வழிகாட்டுதலின்படி வித்யா உபதேசம் என்னும் கற்றலைத் தொடங்கும் நிகழ்வானது இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக கல்வி பயில சேர்க்கப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளாகிய மாணவர்களின் கைப்பிடித்து நெல் மணியிலும் நாக்கிலும் உயிரின் தொடக்கமாகிய “அ” என்று எழுதி வெற்றியின் நாளாகிய விஜயதசமி அன்று படிப்பதற்கு வித்திட்டு, தங்களது குழந்தைகளை ஆசிர்வாதமும் செய்ய இந்நிகழ்வானது உள்ளங்களில் உவகை பொங்கிட நிறைவுற்றது.